* நீங்கள் எவ்வாறு உங்கள் நிறுவனத்தினையும், உங்களது உற்பத்திப் பொருளையும், அதன் சிறப்புகள், தரம், நன்மைகள் மற்றும் அதே வகையிலுள்ள பிற மரச்செக்கு எண்ணையில் இருந்து எவ்வாறு உங்களது எண்ணை வேறுபடுகிறது என்பதை எல்லாம் எத்தனை தூரம் மார்கெட் / சந்தைப் படுத்திக்கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்தே ஆரம்பகட்ட வெற்றிகள் அமையும்.
* ஹெல்த் & வெல்னெஸ் பிரிவினில் நீங்கள் இதனை மார்கெட் செய்தாலும், ஆரம்பகட்டத்தில் வாடிக்கையாளருக்கு உடல்நலம், இயற்கை எண்ணையின் சிறப்புகள், எக்ஷ்ட்ராக்சன் எண்ணையின் தீமைகள் என பாடம் எடுக்க வேண்டித் தான் வரும், ஆனால் அதனை மக்கள் உணரும் விதமாக, விரும்பும் விதமாக, புதிய யுக்திகளோடு, ரசிக்கும் படியும் எப்படி 30 - 50 வயதுக் காரர்களுக்கு தகுந்தபடி - ஆனால் கண்டிப்பாக இந்தியத் தனத்தோடு (நாம் பார்க்கும் லோ ரேட் வீடியோ விளம்பரம் போல இல்லாமல்), சமூக ஊடகங்களை வைத்து திட்டமிட்டு அணுகினால் கண்டிப்பாக வெற்றி தான் . வாழ்த்துக்கள்.
* இந்த செக்மெண்டைப் பொறுத்த வரையில் டீடெயில் ப்ராண்டிங்கில் போட்டிகள் அதிகம். ஆனால் எம்.சி.சி.எம் பிரிவில் அத்தனை அதிகம் போட்டி இப்போதைக்கு இல்லை.
உண்மையான மருத்துவர்களையும், மருத்துவ உண்மைகளையும் பயன்படுத்துங்கள்.
* திரு ரவி அவர்கள் தெரிவித்தது நிஜம். விலை அதிகம் தான். ஆனால் நிஜ உண்மை கண்டிப்பாக விலை அதிகமாகத்தான் இருக்கும். நீங்களே கணக்குப் போட்டிருப்பீர்களே எள், கடலை விலை என்ன / இன்புட் : அவுட்புட் ரேஷியோ என்ன என. அதனால் அந்த விலை இப்போதைக்கு இறங்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
** எங்கள் நிறுவனம் ஆராய்ந்த வரையில், வருத்தம் மிக செய்தி, செக்கு எண்ணையிலும் கலப்படம் வளர ஆரம்பித்துவிட்டது.
* ஆகவே நாங்கள் ஸ்டாண்டர்டைஸ் செய்து வருகிறோம். தரத்திற்கு கண்டிப்பாக அளவு கோல் தேவை.
ஸ்ரீ கிருஷ்ணன்
சங்கம் எத்னோ தெராப்®